கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து,சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறைத் குழுவால் ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில்,தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பின்னர்,சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அக்கறை உள்ள நபர்கள் கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, அறநிலையத்துறை அமைத்துள்ள குழுவிடம் ஜூன் 20,21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து கருத்துக்களை கூறலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,நேரிலோ அல்லது vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஜூன் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.