தமிழகம் தற்போது போதையில் தள்ளாடுகிறது, எங்கு பார்த்தாலும் கஞ்சா,மது விற்பனை, வன்கொடுமைகள் தான் நடைபெறுகிறது என நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச்செயலாளரும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது கள்ளச்சாராயம், கஞ்சா, மது உள்ளிட்டவைகள் தற்போது எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழகம் தற்போது மது போதை மற்றும் கஞ்சா போதையில் தள்ளாடுவதாகவும் கூறினார்.
மேலும் மது போதையால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்றும், அதேபோன்று ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்பதாக கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு ஆன்லைன் சூத்தாட்டத்தில் இருந்து கமிஷன் வருகிறது. தமிழகத்தில் விளம்பர ஆட்சி தான் நடைபெற்று வருவதாகவும், நிர்வாகம் என்ற அடிப்படையைக் கூட அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும் என பொதுக்குழு கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆர். வி. கண்ணன், கன்னிவாடி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள், ஆத்தூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், கலந்துகொண்டனர்
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.