கைதாகும் பயில்வான் ரங்கநாதன்.? நடிவடிக்கை எடுக்க புகார் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்!
Author: Rajesh8 May 2022, 11:19 am
தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல நடிகர்களின் அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் பேட்டிகளில் கூறி வருபவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதனை பாரப்பதற்கென்றே ரசிகர்கள் ஏராளாம். இவர் பத்திரிகையாளர் மட்டுமின்றி பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தில் புகழ் பெற்றவர்.
சமீப காலமாக, பயில்வானின் பேட்டிகள் தொடர்ந்து சரச்சையை ஏற்படுத்தி வருகின்ற இந்த நேரத்தில் அவர் மீது தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்து இருக்கிறார்.

சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில் ‘பயில்வான் ரங்கநாதன் பொய்யான செய்திகளை ஆபாசமாகவும் தரக்குறைவாகும் பேசி வருகிறார், அதனால் பல திரைப்பட நடிகர் நடிகைகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என மனுவில் கூறி இருக்கிறார்.

‘சமீபத்திய பேட்டியில் என்னை யாரும் தாக்க முடியாது அப்படி தாக்க வந்தால் அரிவாளால் அறுத்து விடுவேன் என பயில்வான் மிரட்டி இருக்கிறார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுகிறது. அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் குறிப்பிட்டுஇருக்கின்றனர்.