என் கூட உல்லாசமா இருக்கணும்.. இல்லைனா கொன்னுடுவேன் : பணிப்பெண்ணை மிரட்டிய திமுக பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2025, 11:36 am

கோவை வடவள்ளி மகாராணி அவனியூவில் வசிப்பவர் சுதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான சுதா கடந்த ஆறு வருடங்களாக வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த 40 – வது வார்டு செயலாளர் கதிரேசன் என்ற தி.முக பிரமுகர் வீட்டில் வேலை செய்து உள்ளார்.

தனது குடும்பச் சூழல் காரணமாக, காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை கதிரேசன் வீட்டில் வீட்டு வேலை, சமையல், வீடுகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்து உள்ளார்.இதன் இடையே கடந்த இரண்டரை வருடங்களாக கதிரேசன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக கண்ணீருடன் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: ’விசிகவுக்கும், தவெகவுக்கும் ஒரே கொள்கை தான்’.. முடிச்சு போட்ட திருமா!

இது குறித்து யாரிடமும் சொன்னால், குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறுகிறார். பிரச்சனை தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கதிரேசன் தன்னை மிரட்டிய ஆபாசமாக நடந்து கொண்ட ஆடியோ, வீடியோக்களை வடவள்ளி காவல் ஆய்வாளர் அளித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சுதா கூறினார்.

அதனால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்து உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக கதிரேசனுக்கும், சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்த நிலையில் தற்போது பழக்கத்தை குறைப்பதாக சுதா தெரிவித்திருந்த நிலையில் அதனை மறுத்து மீண்டும் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கதிரேசன் மிரட்டி வருவதாக சுதா கூறினார்.

Complaint Against DMK Executive for Harassing Women

குறிப்பாக சுதா கணவர் மணிகண்டன் மற்றும் கதிரேசன் இருவரும் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் என்று சுதா தெரிவித்தார். கதிரேசன் மீது புகார் அளிக்க தனது கணவர் மணிகண்டனுடன் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!
  • Leave a Reply