கன்னியாகுமரி : வில்லுக்குறி அருகே வீட்டில் பெண்ணுடன் தனிமையை கழித்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான குமாருக்கு திருமணமாகி விஜயஸ்ரீ என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வேலைக்கு சென்ற குமார் கடந்த 11-ம் தேதி இரவு வேலையை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன்பு கார் ஒன்று நின்றுள்ளது. அவரது வீட்டு கதவும் பூட்டப்பட்டிருந்தது. குமார் பல முறை கதவை தட்டிய போதும் மனைவி விஜயஸ்ரீ திறக்காத நிலையில் சந்தேகமடைந்து அறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ-வான நாஞ்சில் முருகேசனுடன் அவரது மனைவி விஜயஸ்ரீ தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ந்துப்போனார். ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டு கதவை திறந்து வேகமாக வந்த முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தகாத வார்த்தைகளால் குமாரை வசைப்பாடியுள்ளார். மேலும் தனது கார் டிரைவர் மகேஷ் என்பவருடன் சேர்ந்து இங்கு இப்போது எதற்கு வந்தாய் எனக் கேட்டு குமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இதில் காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அந்தப்புகாரில், ‘தான் கூலி வேலை செய்து வருவதாகவும் எனது மனைவி விஜயஸ்ரீக்கும், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் என்பவருக்கும் பல வருடங்களாக தவறான உறவு இருந்து வந்ததாகவும் தான் வேலைக்கு நாகர்கோவில் சென்று விடும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் எனது வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் சம்பவத்தன்று நான் அவர்கள் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரமடைந்து நாஞ்சில் முருகேசனும் அவரது டிரைவர் மகேஷ் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக” தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது கார் டிரைவர் மகேஷ் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று பிணையில் வெளிவந்த நிலையில் தற்போது அஇஅதிமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது மகளை களமிறக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மேலும் ஒரு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.