ஸ்ட்ரெஸ் குறையுமாம்.. பள்ளியில் கோட், வேட்டையன்!

Author: Hariharasudhan
13 November 2024, 2:27 pm

நெல்லையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் கோட் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் திரையிடப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட வி.கே.புரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 9ஆம் தேதி தீபாவளித் திருநாள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வேலை நாளாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அன்றைய தினம் இப்பள்ளி செயல்பட்டது.

அப்போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் திரையிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 1 முதல் 5 வரை பயிலும் மாணவிகளுக்கு, கடந்த மாதம், த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படமும் திரையிடப்பட்டு இருக்கிறது.

இந்த திரையிடலுக்காக மாணவிகளிடம் தலா 25 ரூபாய் கோட் படத்திற்காகவும், வேட்டையன் படத்திற்காக 10 ரூபாயும் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இது குறித்த தகவல்கள் நேற்று கசிந்து உள்ளது. பின்னர் இது குறித்து அறிந்த இந்து முன்னணி இயக்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரும், கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்து உள்ளனர்.

Ambasamudram

இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்துள்ளார். இந்த விசாரணையில், மாணவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியாக வேட்டையன் மற்றும் கோட் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டது என தலைமை ஆசிரியர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஒருத்தரும் ஒன்னும் கிழிக்கல… பணத்தை வாங்கிட்டு படுத்து தூங்குறாங்க – சினேகன் காட்டம்!

மேலும், மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக, பள்ளிகளில் பாரதியார், பெரியார், காமராஜர், குட்டி போன்ற சமூக கருத்துடைய கமர்ஷியல் அல்லாத திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?