சாதி பெயரை சொல்லி பெண்ணை காலணியால் அடித்ததாக புகார் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2023, 5:50 pm
சாதி பெயரை சொல்லி பெண்ணை காலணியால் அடித்ததாக புகார் : கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு!!
நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அதை ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கவிதா (40)என்பவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது முன்பு அதே பணியில் பணியாற்றிய ரேவதி என்பவர், கவிதாவிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி, அவர் ஜாதியை பற்றி இழிவாக பேசியது மட்டுமின்றி, தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பசுவந்தனை காவல் நிலையத்தில் கவிதா புகார் மனு அளித்துள்ளார் . தொடர்ந்து பசுவந்தனை காவல் நிலைய சிறப்பு உதவியாளர் மார்த்தாண்ட பூபதி, விசாரணை நடத்தி ரேவதி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.