பிரிவினையை தூண்டுவதாக புகார்.. கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

Author: Rajesh
12 May 2022, 5:59 pm

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம் படத்தில் கமலுக்கென்று ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஏற்கனவே கமல் நடிப்பில் வந்த விக்ரம் பட கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதனை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்தும் விதமாகவோ இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட் கொண்ட விக்ரம் படத்தில் கமலின் மகனாக சூர்யா நடித்துள்ளாராம். அதுவும் கிளைமாக்ஸில் பாகுபலி ஸ்டைலில் சூர்யா வருவார் என்று கூறப்படுகிறது.

அதோடு கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த விக்ரம் படத்தின் சில காட்சிகளும் இந்த விக்ரம் படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலும் கமலின் விக்ரம் சரியான ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘பத்தல பத்தல’ பாடல் வரிகள் பிரிவினையை தூண்டும் விதத்தில் இருப்பதாக கூறி, கமல் மீது நடிவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 979

    1

    0