குவாரி இயங்க நீதிமன்றம் போட்ட தடை : தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 3:46 pm

மணல் கொள்ளை புகார் எதிரொலி : தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

விழுப்புரம் ஏனாதிமங்கலம் குவாரி இயங்க உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் ஆற்றுப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள அளவில் தான் மண் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற ரீதியில் இந்த சோதனையானது மத்திய பாதுகாப்புத்துறை காவலர்களுடன் நடைபெற்று வருகிறது.

ஏனாதிமங்கலம் ஆற்றுப்பகுதியில் 11 ஹெக்டர் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் குவாரிக்கு ஒப்புதல் பெற்று இருந்தாலும் தொடர்ந்து அதிக அளவில் விதிகளுக்கு புறம்பாக மணல் கொள்ளை அடிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டு எழுந்து உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறப்பட்டது 11 ஹெக்டர் பரப்பளவில் ஒரு மீட்டர் (3.5 அடி) ஆழத்தில் மட்டுமே மணல் அள்ள இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக குவாரி இயங்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 407

    0

    0