இரவு நேரத்தில் குவாரியில் கற்கள் திருடப்படுவதாக புகார் : இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர்… மக்களிடம் குறைகள் கேட்பு!!
Author: Udayachandran RadhaKrishnan22 June 2022, 7:21 pm
விழுப்புரம் : கை விடப்பட்ட தண்ணீர் தேங்கி நிற்கும் கல்குவாரியில் இருசக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை ஊராட்சியில் இரவு நேரங்களில் அனுமதி பெறாமல் கல்குவாரியில் கல் எடுப்பதாக புகாரின் அடிப்படையில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வானூர் திருவக்கரை ஆகிய இடங்களிலுள்ள கல் குவாரிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று கைவிடப்பட்ட குவாரிகளில், மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அப்பகுதி மக்களிடம் குவாரிகளில் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் கேட்டு அறிந்துகொண்டார். இருசக்கர வாகனத்தில் சென்று குவாரியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மோகன் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமும், நெகிழ்ச்சியும் அடைந்தனர்.
0
0