மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்: திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு…சிவகாசியில் பரபரப்பு..!!
Author: Rajesh19 February 2022, 1:02 pm
சிவகாசி: மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் மீது திமுகவினர் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 12,602 வார்டுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
சில பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சிவகாசி 25 , 26, 27 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட ரத்தின விலாஸ் பள்ளி வாக்குச் சாவடியில் திமுகவினர் மாற்றுக் கட்சி வேட்பாளர்களையும் உறவினர்களையும் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.