தலைவிரித்தாடும் லஞ்சம்… மக்கள் கொடுத்த புகார் : சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 6:51 pm

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர்
ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும் வந்த புகாரின் பேரில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையை ஒட்டி அப்பகுதியில் இருந்த பத்திரப்பதிவு ஆவணங்களை பிரிண்ட் செய்யும் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் உடனடியாக மூடிவிட்டு சென்றனர்.

மேலும் படிக்க: விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை.. 2026லும் தனித்து தான் போட்டி : சீமான் அறிவிப்பு!

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!