மீண்டும் மீண்டும் முறைகேடு புகார்.. அமலாக்கத்துறை வைத்த செக் : கந்தனேரி மணல் குவாரி மூடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 12:38 pm

மீண்டும் மீண்டும் முறைகேடு புகார்.. அமலாக்கத்துறை வைத்த செக் : கந்தனேரி மணல் குவாரி மூடல்!!

பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பாலாற்றில் அரசு மணல் குவாரி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செயல்பட்டு வந்தது. இங்கு அரசு அனுமதித்த அளவைவிட அதிகளவில் மணல் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடத்து கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறையின் சார்பில் சோதனை நடந்தது. அப்தபோது மணல்ககுவாரியில் முறைகேடாக மணல் எடுத்திருப்பது தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து குவாரி செயல்பாடு ஒரு மாதமாக முடங்கியது. குவாரியில் சேமித்து வைத்து இருந்த மணலை மட்டும் விற்பனை செய்யும் பணி நீர்வளத்துறை நேரடி கட்டுப்பாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

ஆனால் மீண்டும் முறைகேடாக மணல் விற்பனை நடந்ததாக புகார் எபநுத்தால், மணல் விற்பனை நிறுத்தப்பட்டது. குவாரியில் இறுதியாக பாலாற்றில் இருந்து எடுத்து குவித்து வைக்கப்பட்டிருந்த 400 யூனிட் மணல் விற்பனை நேற்று நடந்தது.

இதற்காக மொத்தம் 110 லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் பில் வழங்கப்பட்டது. இந்த லாரிகள் மூலமாக 330 யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டது. மீதம் இருந்த 70 யூனிட் மணல், பில் இல்லாத லாரிகளுக்கு இறுதியாக முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்ததுள்ளது.

தற்போது மணல் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டதால், குவாரி செயல்பாடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் கடந்த 8 மாதங்களாக பரபரப்புடன் இருந்த குவாரி நேற்று மாலை முதல் மூடப்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 854

    0

    0