குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த நபருக்கு ஆணுறை பார்சல் : SWIGGY நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 1:44 pm

கோவை மாவட்டத்தில் ஆங்கில செய்தி நாளிதழில் ஒளிப்பதிவாளராக பணியாற்று வருபவர் நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ஆணுறை இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஸ்விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இது போன்று பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இருந்து ஆணுறை எவ்வாறு வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 468

    0

    0