பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2025, 5:54 pm
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேருந்தில் பயணித்த போது நடத்துநருடன் நட்பு மலர்ந்தது.
நாளடைவில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததுள்ளனர். இளம்பெண்ணும் வீட்டில் யாரும் இல்லாத போது நடத்துநரை அழைப்பது வாடிக்கை.
இதையும் படியுங்க: UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!
அப்படி ஒரு நாள், நடத்துநரை வீட்டிற்கு அழைத்துள்ளார் இளம்பெண். இது தான் சரியான வாய்ப்பு என கருதிய நடத்துநர், உல்லாசமாக இருந்தை இளம்பெண்ணுக்கே தெரியாமல் செல்போனில் வீடியேவாக எடுத்துள்ளார்.
சிறிது நாட்களுக்கு பின் கண்டக்டருடன் இருந்த உறவை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கண்டக்டர், இளம்பெண் வீட்டுக்கு வேலைக்கு வந்த நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது,.
இதையடுத்து இளபெண்ணை வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார் கண்டக்டர். இதனால் தனது செல்போன் நம்பரை மாற்றியுள்ளார் அந்த பெண். இருப்பினும் எண்ணை கண்டுபிடித்து மீண்டும் மிரட்டியுள்ளார்.

பொறுத்துக்கொள்ள முடியாத இஅந்த இளம்பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இதையடுத்து நடத்துநரை கைது செய்த போலீசார், அவரிடம் உள்ள செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
