அரசு பள்ளி மாணவிகளுக்குள் மோதல் : மாடியில் இருந்து கீழே விழுந்த 9ம் வகுப்பு மாணவி கவலைக்கிடம்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 4:48 pm

நெல்லை : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவிகளுக்கிடையே சண்டையிட்டதில் 9ம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளத்தை சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவி சுகபிரியா 9 ஆம் வகுப்பு முதல் மாடியில் உள்ள சக தோழியை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது மற்றொரு மாணவிக்கும் சுகபிரியாவிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சுகப்பிரியா முதல் மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த மாணவி சுகபிரியாவை பள்ளி ஆசிரியர்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு  முதலுதவி அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் சண்டை போட்டதில்  தள்ளி விடப்பட்டரா அல்லது தவறி விழுந்தாரா என்று ராதாபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி  மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சுபாஷினி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1660

    26

    2