நெல்லை : ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு மாணவிகளுக்கிடையே சண்டையிட்டதில் 9ம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு ராதாபுரம் அருகே உள்ள பட்டார்குளத்தை சேர்ந்த 9 ம் வகுப்பு பள்ளி மாணவி சுகபிரியா 9 ஆம் வகுப்பு முதல் மாடியில் உள்ள சக தோழியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது மற்றொரு மாணவிக்கும் சுகபிரியாவிற்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சுகப்பிரியா முதல் மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதில் காயம் அடைந்த மாணவி சுகபிரியாவை பள்ளி ஆசிரியர்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவிகள் சண்டை போட்டதில் தள்ளி விடப்பட்டரா அல்லது தவறி விழுந்தாரா என்று ராதாபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.