நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா.? வெட்டி பாத்துக்குவோம் வா : இளைஞர்களிடையே மோதல்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 5:36 pm

கோவை : முன்விரோதம் காரணமாக கோவையில் வாலிபர்கள் அரிவாள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த காட்சன் என்ற வாலிபரை முன் விரோதம் காரணமாக நேற்று முன் தினம் இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் சுகந்தராஜா மற்றும் காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் புள்ளி பிரவீன், கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த கோபி, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கார்த்திக் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பது தெரிய வந்தது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த அஸ்வின் மற்றும் சரவணன் ஆகிய இருவர் தலைமறைவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கண்ணப்பநகர் பகுதியில் யார் ‘டான்’ என்பதில் இரண்டு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்த சூழலில் காட்சனை கொலை செய்ய முற்பட்டதாகவும் அதற்குள் மக்கள் கூடியதால் விரைவாக அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளனர்.

தொடந்து பிடிபட்ட 4 பேரையும் கைது செய்த ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சூழலில் இருவர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிப்பதற்கான பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் வாலிபர் காட்சனை கொலை செய்ய முயலும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி