‘எங்க நிகழ்ச்சிக்கு நீ எப்டி வரலாம்’: அரசு கல்லூரியில் மாணவிகள் இடையே ‘அடிதடி’…புதுவையில் ஷாக்..!!

Author: Rajesh
17 May 2022, 8:58 am

புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரியில் இருதரப்பு மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவிகளுக்காக பிரியாவிடை நிகழ்ச்சி (Farewell party) நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வேறொரு துறையைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வரலாம் என இறுதியாண்டு மாணவிகள் கேட்டதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் கல்லூரி வாயிலில் இரு தரப்பு மாணவிகளும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!