தேர்தலின் போது காங்., – கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் : நள்ளிரவில் DYFI நிர்வாகியின் வீடு சூறை, கார் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan20 February 2022, 5:49 pm
கன்னியாகுமரி : குழித்துறை நகராட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு – காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் டிஒய்எப்ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சியில் 12வது வார்டில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் வாக்குவாதம் தள்ளுமுள்ளக மாறியது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நள்ளிரவில் டி.ஒய்.எப்.ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர்
ஜினு ஜெனால்டு என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டை சூறையாடி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல் விடுத்த சென்றுள்ளனர்.
இது குறித்து ஜினு ஜெனால்டு கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சி. சி. டி. வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.