திருப்பதி கூட்ட நெரிசலில் என் மனைவி எப்படி இறந்தார் தெரியுமா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மறுக்கும் உறவினர்கள்!

Author: Hariharasudhan
9 January 2025, 5:56 pm

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி பலர் மிதித்ததில் தனது மனைவி உயிரிழந்ததாக கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள திருமலையில் இருக்கும் ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் (TTD) அறிவித்திருந்தது.

இதற்காக பல்வேறு இடங்களில் என மொத்தம் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி, டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டைப் பெற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேநேரம், அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

Tirupati Temple Congestion

இதில், சேலம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த இரு பெண்களும் உயிரிழந்தனர். மேலும், சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!

இந்த நிலையில், உடல்நலக் கோளாறால் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர் குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் மிதித்ததில் உயிரிழந்ததாக அவர் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், இரவு 07.30 மணிக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய எனது மனைவியைக் காணவில்லை என காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அங்கு சென்ற பார்த்தபோதுதான் தன்னுடைய மனைவி உயிரிழந்த விவரம் தனக்கு தெரிய வந்ததாகவும் ஆந்திராவைச் சேர்ந்த நபர் கூறியுள்ளார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 63

    0

    0

    Leave a Reply