விஜய்க்கு வாழ்த்துக்கள்… தவெக கொடியை பார்த்தவுடன் பரபரப்பை கிளப்பிய அரசியல் பிரமுகர்!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2024, 11:40 am
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே வாசன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்..
விமான நிலையம் வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று காலை நடைபெற உள்ளது..
இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? பொது அரசியலில் பணியாற்ற எவருக்கும் உரிமை உண்டு.. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் விஜய், இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. வாழ்த்துக்கள், மக்கள் இயக்கப் பணி மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்..
புதிய கொடியை துவங்கி இருக்கின்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் மரியாதைக்குரிய நடிகர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..
பாலியல் தொந்தரவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது.. தனி மனித ஒழுக்கம் தான் இதற்கு காரணம், இதற்கு மாற்று கருத்து கிடையாது..
காவல்துறையின் கண்டிப்பு அரசியல் போக்கு இதற்கான அடித்தளம் தனி மனித ஒழுக்கம், எனவே ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.. மிருகத்தனமான பாலியல்களை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது..
இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இடம்பெறுவது வேதனைக்குரிய விஷயம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக தூக்கு தண்டனை தேவை, அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படை பயம் இருக்கும்…
சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவது இருந்தாலும் அது குடிப்பழக்கம் போதைப் பொருட்கள் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது… அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகிக்கிறது.. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும் வருத்தத்திற்கு உரிய விஷயம், இந்த மிருகத்தனமான செயல்பாடு உடையவர்களை நேரம் காலம் தாழ்த்தாமல் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்…..