காங் – திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயார் : கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 9:44 pm

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53 வந்து பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நடிகர் விஜய் அரசியலில் வர வேண்டும் என்ற ஆசை முன்னதாகவே இருந்து வந்தது.

தற்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மூலம் வெளிப்படுத்த துவங்கி உள்ளார். இவரது வருகை முன்னதாகவே வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றுகிறது காலம் பதில் சொல்லும்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் விஜயை இணைக்க தயாராக உள்ளோம் அதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும், ஏற்கனவே கலைத்துறையில் இருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர் அவர்களில் பலர் சாதித்தும் உள்ளனர்.

அமலாக்கத்துறை செயல்பாடு என்பது அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயல் சுமார் 13 மணி நேரம் அவரை சித்திரவதை செய்து இரவு நேரத்தில் கைது செய்ய முயன்றதை நாங்கள் கண்டிக்கிறோம்
தாங்கள் ஆளாத மாநிலங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு இது போன்ற நெருக்கடி கொடுப்பது என்பது புதிதல்ல அதுபோன்று தான் செந்தில்பாலாஜியையும் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுவிட்டு உள்ளனர்.
கேரள தமிழகத்தை இணைக்கும் நான்குவழிச்சாலை பணி நடைபெற தடையாக இருப்பது பாறை கற்கள் கிடைக்காமல் இருந்ததே காரணம் தற்போது பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பணியை துவங்க வலியுறுத்தி 1041 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையில் உள்ளது குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த குவாரிகள் தடைசெய்யப்பட்டு உள்ளதால் நமது மாவட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைப்பதில்லை.

அதே நேரத்தில் வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன என அவர் தெரிவித்தார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 461

    0

    0