பொன்முடி மேல ஒரு கண்ணு போல.. திமுகவை கடுமையாக சாடிய காங்கிரஸ் நிர்வாகி!

Author: Hariharasudhan
23 November 2024, 5:03 pm

மயிலாடுதுறையில், அமைச்சர் பொன்முடியை அலறவிட்டவன் என காங்கிரஸ் மேலிட நிர்வாகி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், அமைச்சர் பொன்முடியையே நான் அலறவிட்டவன் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய குலாம் நபி, “கட்சியில் பலமான கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, நம்மை நாம் வளர்த்துக் கொள்ள முடியும், நீங்கள் (காங்கிரஸ் கட்சியினர்) ஏன் எடுத்ததும் திமுக மாவட்டச் செயலாளரிடம் செல்கிறீர்கள்? முதலில் ஒன்றியம், கிளை அளவில் உள்ளவர்களிடம் நன்றாக இருங்கள்.

அவர்கள் (திமுக) இப்போது தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் என நியமித்து இருப்பார்கள். அதனைப் போல் நாமும் நிர்வாகிகளை நியமித்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுகவினர் கட்சியை கட்டமைப்புடன் நிர்வாகிகளைக் கொண்டு நியமித்து, நம்மை பலவீனப்படுத்திவிட்டனர்.

MK Stalin angry

நீங்கள் உங்களுக்குத் தேவையானதை காங்கிரஸ் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என எல்லாரிடமும் கேட்டுப் போராடி பெறுங்கள். இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும், பொன்முடியையே நான் அலறவிடுவேன், இப்போதும் போராடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். இருந்தாலும், அவர் என் நண்பர் தான், பேராசிரியர் தான்” என்றார்.

இதையும் படிங்க: 4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி

முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நகர்வுகள் தமிழகத்தில் சற்று வித்தியாசத்தை உணர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில், இவ்வாறு திமுகவினரையும், திமுக கட்சிக் கட்டமைப்பையும் இவ்வாறு கூறி வருவது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி