அண்ணாமலை படத்துக்கு செருப்பு மாலை போட்ட காங்., பிரமுகர் : ஒரே ஒரு வார்த்தையில் செம பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 7:39 pm

தமிழக காங்கிரஸ் பிரமுகர் நிலவன் என்பவர் சமூக வலைத்தள பக்கத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து விமர்சித்து இருந்தார்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அண்ணாமலை அந்த படத்துடன் தனது வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:- அண்ணா வணக்கம்! செருப்பினால் மாலை அணிவித்து கவுரவம் தந்துள்ளீர்கள். செருப்பு புற அசுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாப்பது.

நான் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் ஏற்றுள்ளேன். செருப்பு அணிவதில்லை. தாங்களும் தங்கள் அன்பான குடும்பமும் நலமுடன் வாழ சபரிமலை சாஸ்தாவை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!