சோனியா வருகையால் வெடித்த கோஷ்டி பூசல் ; காங்கிரசில் கேஎஸ் அழகிரிக்கு கிளம்பிய எதிர்ப்பு ; டெல்லிக்கு ப.சி. ஆதரவாளர்கள் அழுத்தம்..!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 5:50 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியை பதவி நீக்கம் செய்யக்கோரி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக நிர்வாகிகள் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மகளிர் அணி சார்பில் கடந்த 14ம் தேதி சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சோனியா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் விவசாய பிரிவுக்கும் இது தொடர்பாக எந்த தகவலுக்கு கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், கேஎஸ் அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் தலைமைக்கு வலியுறுத்தியுள்ளன்ர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 13.10.2023 அன்று சென்னை வருகை தந்த முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்களை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில்(எனது)ஆர்.எஸ்.ராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்பில் விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டோம்.

ஆனாலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் 14.10.2023 அன்று சில பேர்களை வைத்து கொண்டு, வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக நடத்திய கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவை புறக்கணிக்கும் விதமாக, விவசாய பிரிவு நிர்வாகிகள் யாரையும் கூட்டத்திற்கு அழைக்காமல் அவமதிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டு உள்ளது மிகவும் கண்டனத்துக்குரிய வேதனையான விஷயம் ஆகும்.

மேலும் ஒட்டு மொத்தமாக தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவை புறக்கணித்து இருப்பது தமிழக விவசாயிகளை புறக்கணிப்பது போன்றதாகும். முன்னாள் இந்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சரும், இந்திய பொருளாதார மேதையும் ஆன, தமிழக காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அவர்களையும், வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அழைக்காமல், தான் தோன்றிதனமாக செயல்பட்டு கட்சி வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டு கொள்வதாக அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…