இது நியாயமா..? பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேணாமா..? சர்வாதிகாரி கட்சி பாஜக ; கேஎஸ் அழகிரி காட்டம்..!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 4:55 pm

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல் என தமிழக காங்கிரஸ் மாநில தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி, கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- காஷ்மீர் மாநிலத்தை 370வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும், அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்து சிறு சிறு துண்டுகளாக பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை தொடுத்தும் பாரதிய ஜனதா கட்சி வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் சர்வதிகாரிகள். எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள். மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு எம்பியை நீக்கம் செய்திருக்கிறார்கள். காரணம், அதானி பற்றியும் அதானி கம்பெனியை பற்றியும் கேள்வி எழுப்பியது காரணம். அவர் ஒன்றும் தேச துரோக குற்றம் செய்யவில்லை. தேசத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவில்லை. அதானியை பற்றி பேசினாலே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார்.

மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள். அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. 40% அதிக அளவு வாங்கி இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையிலும் எண்ணிக்கை அதிகம். மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

2002-ல் இதே போன்ற நிகழ்வு அந்த மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது. அப்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். நாடாளுமன்றத்தை கைப்பற்றினோம்.

தமிழகத்தை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது. எந்த ஒரு நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது. ஆனாலும் அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் யார் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் தான். இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது.

இது மனித குற்றம் அல்ல, இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். 6000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது, என தெரிவித்துள்ளார்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…