நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பிரமுகர் கைது : போலீசார் போட்ட வழக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2023, 3:42 pm
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை உதித்ததற்கும், அவரது எம்பி பதவியை பறிமுதல் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டது
அந்த வகையில் கடந்த ஆறாம் தேதி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் துரை மணிகண்டன் பேசும்போது நாங்கள்(காங்கிரஸ்) மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அப்படி ஆட்சிக்கு வந்ததும் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். வர்மாவின் நாக்கை அறப்போம் என ஆவேசமாக பேசினார்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153 பி மற்றும் 506 /1 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டனை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.