ரூ.200-னு சொன்னாங்க… ஆனா ரூ.150 தான் தராங்க… காங்., வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் முனுமுனுப்பு..!!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 7:40 pm

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு ரூ.200 என அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு ரூ.150 கொடுத்ததாக முனுமுனுத்தபடி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெதூர், ஆவூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலைச்சேரி, பழவேற்காடு உள்ளிட்ட மீனவ கிராமத்தில் திருவள்ளூர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

அப்போது வெப்பத்தூர் கிராமத்தில் 100 நாட்கள் வேலை முறையாக தருவதில்லை எனவும், திமுகவில் 30 வருடங்களாக இருக்கிறேன், ஓட்டு மட்டும் கேக்குறீங்க என்ன செய்தீர்கள் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டீஜே கோவிந்தராஜன் துரை சந்திரசேகர் ஆகியோரிடம் கேள்வி கேட்டதால், திமுக நிர்வாகியை வேனில் இருந்து கீழே இறக்கி அனுப்பி வைத்தனர்.

மேலும், 100 நாட்கள் வேலையை பாஜக தான் நிறுத்தி உள்ளது என்று தெரிவித்த அவர்கள், பின்னர் அண்ணாமலைசேரி பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தனர். அப்போது, பொது மக்களுக்கு 200 ரூபாய் வழங்குவதாக கூறிவிட்டு இரண்டு பேருக்கு 300 ரூபாய் என சேர்த்து வழங்கியதாக அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டனர். எங்களுக்கு பணம் தருவதாக கூறி, அதிலும் 100 ரூபாய் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தபடியே சென்றனர்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

வாக்கு சேகரிக்க வந்த பழவேற்காடு பகுதி மக்களுக்கு 100 ரூபாய் வழங்கியதாகவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு கண்காணிப்பிற்கு வரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. தனது மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் வகையில், திமுகவினர் தொடர்ந்து பிரச்சாரங்களில் பண விநியோகத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 251

    0

    0