கயிறு இருந்தா கொடுங்க… தொங்கிட்டு சாகறேன் : கேள்வி கேட்ட பொதுமக்களிடம் கொந்தளித்த காங்., எம்பி!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2023, 5:23 pm
திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் ஊராட்சி குமரசிறுலபாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் ரிப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். அவரிடம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக ஊதியம் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் பேசுகையில், திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி அமைந்தது உங்களுக்கு தெரியாதா என கேட்ட அவர், கயிறு கொடுங்கள் எங்கேனும் சென்று தூக்கு போட்டுக்கிறேன் என்றும் ஜல் ஜீவன் திட்டம் சிறந்த திட்டம் பாரத பிரதமர் மோடியை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்..