அதானிக்காகவே விமான நிலையங்களை திறக்கும் பிரதமர் மோடி… காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 9:03 pm

திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் செய்து பிரதமர் மோடி திறந்து வைத்ததே அதானிக்கு தாரை வார்ப்பதற்காகத்தான் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி பேசியதாவது :- திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட விமான நிலையம் அதானிக்கு தாரை வார்த்து கொடுக்கத்தான் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதே போன்று மத்திய அரசு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. தமிழகத்தில் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருக்கிறது, என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி