மோடி அரசு தோல்வியில் இருந்து தப்பிக்காது… ராஜீவ் காந்தியின் சாதனையை முறியடிப்பார் ராகுல் காந்தி ; எம்பி ஜோதிமணி பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
6 September 2023, 9:45 pm
Quick Share

இந்தியா என்ற பெயரே மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுக்கோட்டையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட விராலிமலை தொகுதியில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம் பி ஜோதிமணி பேசியதாவது :- இந்தியா என்ற பெயரே மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா கூட்டணி தான் மோடியை ஆட்சியில் இருந்து மக்கள் துணையோடு இருக்கக்கூடிய நிலையால் தோல்வி நிச்சயம் என்ற சூழலால்தான் மோடி அரசு இது போன்ற பெயர் மாற்று வேலைகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் எதையாவது மாற்ற வேண்டும் என்றால் மோடியின் மக்கள் விரோத அரசை தான். 9 ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவை நாங்கள் மாற்றுவோம் என்று வந்தார்கள். ஆனால் தற்பொழுது இந்தியா என்ற பெயரை தான் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றக்கூடிய சூழல் உள்ளது.

இந்தியா என்பது ஆர்எஸ்எஸ்க்கோ, பாஜகவுக்கோ, மோடிக்கோ சொந்தமானது அல்ல. 140 கோடி மக்களின் தேசம் இது. மோடி இந்த 9 ஆண்டுகளில் எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்றுதான் பெயர் பலகை வைத்திருப்பார்கள். இந்திய அரசியல் சாசனமும் அதைத்தான் குறிப்பிடுகிறது. பெயர் மாற்று அரசியல் ஒரு மலிவான அரசியல் யுத்தி. பிரச்சனைகளிலிருந்து மடைமாற்றம் செய்வதற்காக தான். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பெயர் மாற்றத்தினாலையோ, இது போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதுனாலையோ, மோடி அரசு தோல்வியில் இருந்து தப்பிக்காது.

இதுவரை ராஜீவ் காந்தி வென்றது தான் வரலாறு. அந்த வெற்றியை முறியடித்து நானுருக்கும் மேற்பட்ட இடங்களை இந்தியா கூட்டணி வெல்லும். அதை நாம் பார்ப்போம் அதுவரை எந்த திசை திருப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் உடன்பட மாட்டார்கள். இன்றைக்கு ஒரு நாட்டின் பெயரை மாற்றக்கூடிய சூழலில் நாம் இல்லை. அவ்வளவு மோசமான பெயர் கிடையாது. இன்று விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை, மணிப்பூர் போன்ற மாநிலம் பற்றி எரியக்கூடிய நிலை உள்ளது. அன்பும், ஒற்றுமையும் விதைக்கப்பட்ட இந்திய மண்ணில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்சியில் வெறுப்பும், வன்முறையும் பிரிவினையும் விதைக்கப்படுகிறது. பொருளாதாரம் மோசமான நிலையில் சரிவடைந்து இருக்கிறது. 40 ஆண்டு காலம் இல்லாத வேலை வாய்ப்பு இல்லை நிலவுகிறது.

கரூர் நான்காவது தொழில் தரக்கூடிய நகரமாக இருந்தது. இரண்டு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை தரக்கூடிய நகரமாக இருந்த நிலையில், தற்பொழுது 50000 பேர் வேலையில்லாமல் மோடி ஆட்சியில் தவிர்த்து வருகின்றனர். ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், இதுபோன்று இந்தியா முழுவதும் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ராகுல் காந்தி நடைபயணத்தின் போது பொதுமக்களில் பலர் மக்கள் விரோத நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறியதை பார்க்க முடிந்தது. அதனால், இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அந்த கூட்டணியை பார்த்து பயந்துதான் இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி நடைப்பயணத்திற்கு பெயர் வைத்ததை வைத்து ஒரு திசை மாற்றம் செய்கிறார்கள். 9 ஆண்டு காலமாக மோடி அரசில் ஒரு சாதனையும் இல்லை. ஆனால் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் மகளிருக்கு இலவச பேருந்து என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர் அது மட்டும் இன்றி கல்வியிலும் சுகாதாரத்திலும் தமிழ்நாடு காய்ச்சல் காட்டுகிறது. இதுபோல் இரண்டு ஆண்டுகளில் திமுகவிற்கு செல்வதற்கு சாதனைகள் உள்ளது. ஆனால் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் வேதனைகள் மட்டும்தான் உள்ளது அதை மறைப்பதற்காக தான் பாஜக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ஆர்எஸ்எஸ் எவ்வளவு மோசமான வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் தான் இது. அமைச்சர் உதயநிதி ஒரு கருத்தை சொல்கிறார். அந்த கருத்திற்கு அவரது தலைக்கு ஒருவர் விலை வைக்கிறார் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடமாட முடியவில்லை என்றால், மோடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்து உள்ளது என்பதை காட்டுகிறது. ஒரு அமைச்சருக்கு இந்தியாவில் இந்த நிலை என்றால், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது என்று நாம் பார்த்து வருகிறோம்.

பாஜக ஆட்சியில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாஜக எண்ணைக்கு எதிராகவே பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் பளுதூக்கும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட விரோத செயலில் ஈடுபடுகின்ற குற்றவாளிகளை பாதுகாக்கின்ற கொண்டாடுகின்ற வேலையை மோடி அரசு செய்து வருகிறது இது இந்தியாவுக்கு மிக மிக ஆபத்தானது.

சமூகம் என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது தான். ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அரசாங்கம் செயல் பட்டாலும் கூட சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் மாறாத வரை அதற்கு எதிராக போராடி சமநீதியு,ம் சம வாய்ப்பும் கிடைக்கும் வரை நாம் பேசி தான் ஆக வேண்டும் போராடி தான் ஆக வேண்டும். காந்தி, காமராஜர் போன்றவர்கள் எல்லாம் சாகும் வரை இது பற்றி தான் பேசி இருக்கிறார்கள் அதைப் பற்றி பேசுவதற்கான தேவை இந்தியாவில் உள்ளது.

உலகின் பல நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. ஒரு அமைச்சர் ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் பொது வாழ்க்கையில் இருப்பவர் சமூக ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு பேசாமல் இருக்க முடியும் ‌ அவர் பேசியது சமூக ஏற்றத்தாழ்வுகளை தான். மதத்திற்கு எதிராகவோ ஜாதிக்கு எதிராகவோ உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகள் பாஜக ஆட்சியில் அதிகமாகிவிட்டது. அதனால்தான் ஒரு மதத்திற்கு எதிராகவும் ஒரு ஜாதிக்கு எதிரான விஷயமாக திசை திருப்புகிறார்கள்.

இந்துக்கள் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசவில்லை. தமிழ்நாட்டில் ஒரு விஷயத்தை சொல்வதற்கும் அதனை வடநாட்டில் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. சனாதனம் என்ற பெயர் தமிழ்நாட்டில் மனுநிதியை தான் சொல்கிறோம் பகவத் கீதையை சொல்லவில்லை. பகவத் கீதையோ குர்ஆனோ பைபிளோ மனிதர்களை பிரிக்கவில்லை சாதியின் அடிப்படையில் மனுநீதி தான் பிடிக்கிறது. சனாதனம் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் மனுநீதியைத் தான் குறிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தெருவுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சொல்கின்ற ஒரு வார்த்தை வட மாநிலங்களில் வேறு விதமாக இருக்கிறது. அதனால்தான் ஒரு நாடு ஒரு தேசம் ஒரு மொழி ஒரு கலாச்சாரம் ஒரு கட்சி ஒரே தேர்தல் என்பது இந்தியாவிற்கு உதவாது. அதற்கு இதுதான் உதாரணம். ஒரு ஊரில் மனுநீதியை சனாதனம் என்று கூறுகின்றோம் இன்னொரு ஊரில் இந்து மதத்தை சனாதனம் என்று சொல்கிறார்கள். இதுபோல் பாகுபாடு நிறைந்த ஒரு தேசத்தை அந்தந்த மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் உணர்வுகள் கலாச்சாரம் பண்பாடு மொழி சார்ந்த தான் அணுக முடியும். அனைத்துமே ஒன்று என்றால் அனைத்தும் ஒன்றாக தற்போது உள்ளதா?

பாஜகவின் மலிவான அரசியலுக்கு அவர்களின் தோல்வியை மறைக்கின்ற அரசியலுக்கு அவர்களது வெறுப்பை வன்முறையை விதைக்கின்ற அரசியலுக்கு சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் உருவாக்குகின்ற சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆதரிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஒரு கருத்தியலை மடைமாற்றம் செய்கின்றனர். மனுநீதி என்பது வேறு பகவத் கீதை என்பது வேறு இந்து மதம் என்பது வேறு இந்து துவா என்பது வேறு.

இந்துத்துவா என்பது பாஜகவின் அழிவு ரீதியான அரசியல் கோட்பாடு. இந்து மதம் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை இரண்டுக்கும் வேறு வேறு உள்ளது. பாஜகவுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாஜக இந்துக்களுக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே எதிரான கட்சி.

ஒரு அரசு என்பது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஒரு அரசாங்கத்திற்கு அரசியல் சாசனம் தான் இறுதி நம்பிக்கை அதைத்தான் காலம் காலமாக ஒரு ஜனநாயகத்தில் கொண்டு வருகின்றோம். அதில் ஏன் சமூக ஏற்றத்தாழ்வுகளை பேசக்கூடாது என்று கூறுகிறார்கள் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தானே செய்கிறது. பாஜக அதன் தோல்வியை மறைக்க அதன் பயத்தின் விளைவாக வந்தது தான் இது. இது திசை திருப்பும் அரசியல் அந்த அரசியலுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகளோ இந்திய மக்களோ ஈடாக மாட்டார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தேசிய பிரச்சனையும் தேசிய அளவில் உள்ள தலைவர்களும் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். மாநில மக்களின் பிரச்சனைகள் வெளியே தெரியாமல் போய்விடும். மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசாமல் அவர்கள் சொல்வதைக் கேட்காமல் மோடி ஆர்எஸ்எஸ் பாஜக சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்பதற்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் இதை நாம் எதிர்க்கின்றோம். ஒரே நாடு ஒரே தேர்தலில் 2014 இல் அல்லது 2019-ல் செய்ய வேண்டியது தானே தற்போது செய்ய என்ன காரணம் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை மோடி அரசாங்கம் தழுவும். அதற்காகத்தான் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு எதிரானது.

பாரத் என்று பெயர் மாற்றுவதால் ஒரு விளைவுகளையும் ஏற்படுத்தாது. நாடாளுமன்ற கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் பேசுவோம். பதினெட்டாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெயர் மாற்ற மசோதா உடன் வரமாட்டார்கள் என்றுதான் என் கருத்து. ஏனென்றால் நினைத்தவுடன் அவர்கள் பெயர் மாற்றத்தை கொண்டுவர முடியாது.

பெயர் மாற்றம் கொண்டு வராததற்கு முன்பாகவே குடியரசு தலைவரை பாரத் குடியரசு தலைவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது இந்தியா ஆர் எஸ் எஸ் பாஜக மோடி என அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறார்கள். இந்த நாடு அவர்களுக்கு சொந்தமானது இல்லை, மக்களுக்குத் தான் சொந்தமானது என்பதை வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிறுவிப்பார்கள், என்று தெரிவித்தார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 311

    0

    0