வேலை தரேனு சொன்னீங்க.. என்னாச்சு? காங்., MP ஜோதிமணியை வழிமறித்து கேள்வி கேட்ட இளைஞர்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 6:38 pm

வேலை தரேனு சொன்னீங்க.. என்னாச்சு? காங்., MP ஜோதிமணியை வழிமறித்து கேள்வி கேட்ட இளைஞர்..!!!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட நாகம்பட்டி, சேனன்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கருக்காம்பட்டி, குட்டம், காசிபாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது நாகப்பட்டியில் உள்ள விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில்களில் வழிபாடு செய்தனர். அதன் பின்னர், ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாகம்பட்டியில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு ஜோதிமணி பிரச்சார வேனில் இருந்து இறங்கி புறப்பட சென்றார். அப்போது அவரை இடைமறித்த அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினீர்கள். ஆனால் எங்கள் பகுதியில் யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

அப்போது ஜோதிமணி அவருக்கு பதில் சொல்லாமல் வேகமாக காரில் ஏறினார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஜோதிமணி காரில் இருந்து ஆவேசமாக இறங்கி வந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த நிருபர்களை அழைத்து பேசினார். அப்போது, இது போன்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். கடந்த 42 ஆண்டுகளாக இல்லாத வேலைவாய்ப்பின்மை தற்போது மோடியின் அரசாங்கத்தில் நிலவுகிறது.

இதுபோல் வேலை கேட்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், நரேந்திர மோடியின் அரசு அகற்றப்பட வேண்டும், மத்தியில் ராகுல் காந்தி தலைமை தானே இந்தியா கூட்டணியின் அரசாங்கம் அமைய வேண்டும்.

நாங்கள்(காங்கிரஸ்) ஆண்டு காலத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்று இது போல் ஒரு இளைஞர் கூட கேட்டிருக்க மாட்டார்கள். அதனால் வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அந்த வேலையை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மீண்டும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறிவிட்டு வேகமாக காரில் ஏறிச் சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஆள்கள் கிடைக்காமல் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தனர் மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகள் வைத்து ஆரத்தி எடுக்கப்பட்ட சம்பவம் அரேங்கிறியது

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!