செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா… தீர்ப்புக்கு முன்னதாகவே வழங்கப்பட்ட தண்டனை ; எம்பி கார்த்திக் சிதம்பரம் கருத்து

Author: Babu Lakshmanan
13 February 2024, 5:10 pm

குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட தண்டனையாக செந்தில் பாலாஜி ராஜினாமாவை பார்ப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் பா சிதம்பரம் செய்தியாளர்கள் சந்தித்தபோது பேசியதாவது:- EVM மிஷினில் எனக்கு நம்பிக்கை உண்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VV பேட் அமைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும்.

டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். ஆனால், அதனை ஒடுக்குவது என்ற சர்வாதிகாரப் போக்கை பாஜக கடைபிடிக்கிறது. தமிழக ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சட்ட சபையில் காட்டக்கூடாது. மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பிரதிபலிக்கிறோம். மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். தமிழக அரசு ஊழியர்களின் பென்சன் கோரிக்கையை தமிழக அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப தான் அமல்படுத்த முடியும், என்றார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 380

    0

    0