திமுக ரூ.1000 கொடுக்கறாங்க..? எங்களுக்கும் ஏதாவது தரலாமே… காங்கிரஸ் பிரமுகர் கேள்விக்கு திமுகவை மறைமுகமாக சீண்டிய ப.சிதம்பரம்!!

Author: Babu Lakshmanan
4 January 2023, 6:22 pm

சிவகங்கை ; காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முன்னாள் எம்பி ப.சிதம்பரம் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சில நாட்கள் முன் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்ட கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு, சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி, சிதம்பரத்திடம் புகார் தெரிவிக்கும் போது, ப.சிதம்பரம் முன்பே கட்சி நிர்வாகிகள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டனர்.

பின்னர், காங்கிரஸ் கட்சியை நிர்வாகி ஒருவர் பேசும்பொழுது, கடந்த தீபாவளியின் போதுடு திமுகவில் 27 வார்டுகளிலும் திமுக நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, நமது காங்கிரஸ் கட்சியில் ஏழ்மை நிலையில் உள்ள நிர்வாகிகளுக்கு 100 ரூபாய் கூட கொடுக்க கூடாதா..? என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், கொள்ளையடித்தால் தான் நமது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க முடியும், அப்போ என்னை கொள்ளை அடிக்க சொல்கிறீர்களா..? தவறு செய்யச் சொல்கிறீர்களா..? என்றும், எம்பி நிதியில் இருந்து காண்டிராக்ட் எடுத்து அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கி கொடுக்க சொல்கிறீர்களா..? என்று நிர்வாகியிடம் கூறினார்.

இதனை அடுத்து பேசிய முன்னாள் மத்திய் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி மானாமதுரையில் மூன்று நான்கு கோஸ்ட்டிகளாக பிரிந்துள்ளது என்றும் அவர் பேசினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்