ராகுல் காந்தியின் பெயரை சொல்லவே பயப்படுகிறார் பிரதமர் மோடி ; எம்.பி திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 10:00 am

5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கட்சியினரின் தூண்டுதலின் பெயரில் ராகுல்காந்தியை பத்து தலை ராவணனோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தி கேலிசித்திரம் வரைந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கண்டன உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர் கூறியதாவது :- பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் காந்தியின் பெயரை சொல்லவே மறுக்கிறார்கள். ராகுல் காந்தியின் பெயரையும் கூற அச்சப்படுகிறார்கள். இதன் வெளிப்பாடுதான் பாராளுமன்றம் மற்றும் வீடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றினார். ஆனால் ராகுல்காந்தி நீதிமன்ற மூலம் வெற்றி கண்டார்.

5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என செய்தி ஊடகங்கள் அறிவித்து வருகின்றனர். இதனால், ராகுல் காந்தியின் பெயரை கொச்சைப்படுத்துகிறார்கள்.

மேலும், மத்திய அரசின் கீழ் உள்ள சிபிஐ, ஈடி ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சிகளின் மீது சோதனை மேற்கொண்டு ஒரு சிலரை கைது செய்து அச்சம் ஏற்படுத்தி வருகின்றனர்,

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாமன்ற உறுப்பினர்கள் ரேக்ஸ், சோபியா விமலா ராணி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் தொட்டியம் சரவணன், வக்கீல் சரவணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றம் அருகே உள்ள பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதை அறிந்த பிஜேபி கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். காவல்துறையினர் இரு கட்சியினர் இடையே அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால், காங்கிரஸ் கட்சியினரை நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்