எத பண்ணாலும் நொட்ட சொல்லிட்டே இருப்பாங்க.. என்னோட விருப்பம் இதுதான் விஜய் வசந்த் பளிச்..!

Author: Vignesh
13 ஆகஸ்ட் 2024, 6:25 மணி
Quick Share

குமரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிக்கும் நிகழ்வை மேல்புறம் சந்திப்பு பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தபின் மக்களோடு மக்களாக சிறிய ஹோட்டலில் தோசை உண்டபின் துவங்கினார்.

நடந்து முடிந்த குமரி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டாவது நாளாக மேல்புறம் சந்திப்பில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர் தனது முதல் கூட்டத்திலேயே குமரி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்து 14 கோடி ருபாய் பெற்றுள்ளேன் விரைவில் இதற்கான பணிகள் நடைபெறும் அதோடு மட்டுமல்லாமல் நான்கு வழிச்சாலை பணியும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு தென்னிந்தியாவையே வஞ்சிப்பதாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களை எல்லாம் முழுமையாக வஞ்சிக்கிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. அதேபோல்தான் வயநாட்டிலும் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையிலும், கண்டிப்பாக இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து வருகிறார்.

அதை செய்ய அரசு செய்ய முன்வர வேண்டும் சட்டம் இல்லை என்றாலும் போதுமான நிதியை ஒதுக்கி கொடுத்திருக்க வேண்டும். ஏன் சந்திரபாபு நாயுடு நிதீஷ்குமாருக்கும் 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கொடுக்கும் அரசுக்கு இதற்கு தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க முடியாதா வயநாடு சம்பவம் நிகழ்ந்த உடனேயே தமிழகத்தின் அனைத்து மலையோர பகுதிகளிலும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நீலகிரியில், இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறும் என்ற ஒரு வதந்தி பரவி வருகிறது. இது போன்ற எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நமது தமிழக அரசு எடுத்து வருகிறது. சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில்தான் இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது.

எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இதற்கான ஒரு கமிட்டி அமைத்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் அமைதியாக இருக்கும். சிறுபான்மையினரை சீண்டி பார்க்கும் செயலில் தான் மத்திய அரசு செய்கிறது. எந்த ஒரு சிறுபான்மையினரும் நம் நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நமது அரசு செய்து கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதனை எதிர்க்கவும் ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். அதில், நல்லது எது என்று தெரிந்து செயல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசினார். தொடர்ந்து, விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்து வருகிறார். உடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டும் உள்ளார்.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 373

    0

    0