ஏமாந்தது போதும்.. இன்னும் எத்தனை காலம் தான் கையேந்தியே நிற்பது… உச்சகட்ட விரக்தியில் செல்வப்பெருந்தகை.!

Author: Babu Lakshmanan
13 May 2024, 10:04 pm

இன்னும் எத்தனை காலம் தான் இன்னொரு கட்சியிடம் தொகுதிகளுக்காக கையேந்தி நிற்பது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை – ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது :- 1967ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர பாடுபட வேண்டும்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸுக்கும் குண்டாஸா..? வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

57 ஆண்டுகள் நாம் அமைதியாக காத்திருந்தோம். இன்னும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டுமா..? என்ற கேள்வி எழுகிறது. ஒரு நொடிகூட இனி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?. ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும், எனக் கூறினார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 624

    0

    0