திமுக அரசுக்கு எதிராக காங்கிரஸ் திடீர் போர்க்கொடி… கேஎஸ் அழகிரி வைத்த கோரிக்கை : அதிர்ச்சியில் CM ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 8:16 pm

தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது எனவும், திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் உடனபடாத எதையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழக காங் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்திற்காக செய்யப்பட்ட ஆட்சி. சாதி மதம் மொழியை சொல்லி சிறிது காலத்திற்கு பயன்பெற்றனர். நெடுதொலைவிற்கு பயன்பெற முடியவில்லை.

ஆர்.என்.ரவி என்கிற தனி மனிதர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஆளுநர் ரவி எதையும் பேசக்கூடாது. திராவிட மாடலை எடப்பாடி, அண்ணாமலை ஆகியோர் விமர்சிக்கலாம். ஆளுநர் கருத்து எல்லை மீறிய செயல். அவரவர் கொள்கை தான் உயர்ந்தது. அதனை ஆளுநர் விமர்சிப்பது சரியானது அல்ல. அதனை விமர்சிப்பது அருவருக்கத்தக்க ஒன்று. சனாதன தர்மத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என இதுபோன்று பேசுகிறார்கள். வெறுப்பையும், விஷமத்தையும் ஆளுநர் கக்குகிறார்.

எங்கள் கூட்டணிக்குள் சண்டை வந்து நாங்கள் பிரிந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறார்கள். அரசு செயல்படுத்தும் திட்டங்களில் எங்களுக்கு உடன்பாடாத எதையும் நாங்கள் ஆதரிப்பதில்லை.

12 மணி நேர வேலை மசோதாவை உடனே எதிர்த்தோம். ஒரு ஆட்சி என்பது சில நேரங்களில் மாறிக்கூட போகும். அதில் தவறில்லை. அரசில் பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் இதுபோன்ற முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இறுதி முடிவை முதல்வர் எடுக்கிறார். உடனடியாக மாற்றி விடுகிறார். அதனை வரவேற்கிறோம்.

மது விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடே கிடையாது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழர்கள் முன்னேற மதுக்கடைகளை மூட வேண்டும். மதுவிற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்தக்காலத்திலும் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் வாக்கு வங்கி பலமாக உள்ளது. மதம் வேண்டும் என்கிறோம். ஆனால், மதவெறி கூடாது” என தெரிவித்தார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 460

    1

    0