காங்., தேர்தல் அறிக்கை வேடிக்கையா இருக்கு.. வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் இருக்கா? குஷ்பு கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 9:07 pm

காங்., தேர்தல் அறிக்கை வேடிக்கையா இருக்கு.. வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் இருக்கா? குஷ்பு கேள்வி!!

வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் யை ஆதரித்து புளியந்தோப்பு, கனிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குஷ்பு சுந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் முன்னதாக செய்திளார்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நீட்டை மாநில அரசு உரிமைக்கு விடுகிறார்கள் என தெரிவித்த அவர், மக்களை ஏமாற்ற கொண்டுவந்தது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என கூறினார்.

2ஜி , விளையாட்டு என அனைத்திலும் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி ஊழல் செய்யாமலே இருந்தாலே போதும் என தெரிவித்தார். மத்திய அரசு கொடுத்த நிதியை மக்களுக்கு செலவு செய்யப்பட்டதற்கான கணக்கு காண்பித்து, மேலும் நிதியை பெற வேண்டும் என கூறினார்.

தனிப்பட்ட முறையில் செயல்படும் அமலாக்கதுறையை பாஜக ஏவி விடுகிறது என்பதை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடத்திலும் வெற்றி பெறுவார்கள் என கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்