புதுச்சேரி : புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியிடம் ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்த திமுக, காங்கிரஸ் முயல்வதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு தரப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகளை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது என்றும், பள்ளியில் சீருடை அணிவது சம்பந்தமான,
ஆசிரியரின் உண்மை தன்மையற்ற சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் மாணவ, மாணவியர்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியை திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும், மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதில் அரசு, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு இது தொடர்பாக துறைரீதியான விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக தொடர்ந்து நாடகம் நடத்தி வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.