முக்கிய பிரமுகரை கொல்ல சதித் திட்டம் : வாடகைக்கு வீடு எடுத்து வெடிப்பொருட்கள் தயாரித்த கும்பல்.. அதிர வைத்த காஞ்சிபுரம் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 1:44 pm

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நான்கு கையெறி வெடிகுண்டுகள் , 2 கிலோ வெடி மருந்து பொருட்கள், ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் நகரில் மாண்டுகனிஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் தேவிகா. இவருடைய வீட்டில் காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் இரண்டாவது மாடியில் வாடகைக்கு இருக்கிறார் .

இவர் குருவிமலை பகுதியில் பம்பை அடித்தும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணி ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார் .இந்நிலையில் இங்கு கஞ்சா இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததன் பேரில் காவல் காவல் துறையினர் தேவிகாவின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கு உள்ள சிவசங்கரன் குடியிருக்கும் பகுதியில் ஆய்வு செய்கின்றனர்.

அங்கு ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. சிவசங்கர் அறையை சோதனை செய்தபோது அங்கு நாட்டு பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கையெறி வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் கூழாங்கல், காகிதம், கயிறு, முட்டை , பூட்ஸ் ஆணிகள், பால்ஸ்கன் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

உடனே சிவகாஞ்சி காவல்துறையினர் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சிவசங்கரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிவசங்கரின் கூட்டாளிகளான சென்னை வியாசர் பாடி பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி புகழேந்தியை கைது செய்துள்ளனர். மேலும் விக்கி மற்றும் பிரேம் ஆகியவர்கள் தலைமறைவு. தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மருதம் வெடிகுண்டு நிபுணர் குழு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் 7 பேர் சம்பவ இடத்திற்கு வந்து நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்ய சென்னை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

சிவசங்கரிடம் விசாரணையில் ஈடுபட்ட பொழுது , சென்னை வியாசர்பாடி சேர்ந்த புகழேந்தி என்பவர் இங்கு தங்கி இருந்து இந்த நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .

மேலும் இவருடன் மேலும் இரு நபர்கள் மேற்கண்ட நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணிகள் ஈடுபட்டதாகவும் இவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கையெறி வெடிகுண்டுகளை தயாரித்து ஆர்கே என்ற முக்கிய குற்றவாளியை கொல்ல திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் நகரில் குடியிருப்புகள் நிறைந்த மையப் பகுதியில் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 559

    0

    0