தம்பி மனைவியை கொலை செய்ய சதி.. கோவையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நாத்தனார்.. நிற்கதியில் 3 குழந்தைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 1:12 pm

தம்பி மனைவியை கொலை செய்ய சதி.. கோவையில் இருந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நாத்தனார்.. நிற்கதியில் 3 குழந்தைகள்!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மகாத்மா தனியார் பள்ளி அருகே வசித்து வந்தவர் ஜெயபால் மனைவி காளியம்மாள்(38). இதில் ஜெயபால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக விபத்தில் இறந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 29 அன்று மாலை சுமார் 4.45 மணியளவில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்து தாய் காளியம்மாளை தேடி பார்த்து உள்ளனர்.

அப்போது வீட்டின் கடவு பகுதியில் காளியம்மாள் இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் புதியம்புத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர் சண்முகம், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராமச்சந்திரன் (28).இவரது உடன் பிறந்த அக்கா விஜயலட்சுமி (30) என்பவர் தனது தகப்பனார் பார்த்து வந்த இரும்பு கடை வியாபாரத்தை தற்போது கவனித்து வந்துள்ளார்.

மேலும் ராமச்சந்திரன் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கு லட்சுமணன் வீட்டிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராமச்சந்திரன் மட்டும் கோயம்புத்தூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.மேலும் அவ்வப்போது புதியம்புத்தூரில் உள்ள காளியம்மாள் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் .

மேலும் ராமச்சந்திரனின் அக்கா விஜயலட்சுமி தனது உறவுமுறை அத்தையான விளாத்திகுளம் ஓடைத் தெருவை சேர்ந்த கவிதா (44) என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு காளியம்மாள், ராமச்சந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அப்பாவின் சொத்துக்களில் பாதி காளியம்மாளுக்கு சென்று விடும் எனவே காளியம்மாளை தீர்த்துக்கட்டுமாறு தெரிவித்து அதற்கு ஆல் ரெடி பண்ணுமாறு கவிதாவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கவிதா தனது உறவினரான மாமுநயினார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவேக் (24) என்பவரிடம் இது தொடர்பாக பேசியுள்ளார். அப்போது விவேக் கீழவிளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயபாலன் (24) என்பவரை அடையாளம் காட்டியுள்ளார் .

மேலும் விஜயலட்சுமியின் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்த புதியம்புத்தூர் நடுவகுறிச்சியை சேர்ந்த கலைச்செல்வன் (24)என்பவரின் செல்போன் மூலமாக விஜயலட்சுமி, ஜெயபாலன் என்பவரிடம் பேசி காளியம்மாளை தீர்த்து கட்டினால் ரூபாய் மூன்று லட்சம் பணம் தர விஜயலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார் .

மேலும் முதல் கட்டமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஜெயபாலன் கோயம்புத்தூருக்கு சென்று அட்வான்ஸ் ஆக ரூபாய் 50 ஆயிரத்தை விஜயலட்சுமி இடம் வாங்கிச் சென்றுள்ளார் .

மேலும் அவர் பணத்தை வாங்கிக் கொண்டு எதுவும் பண்ணவில்லை எனக் கூறி ஜெயபாலனை விஜயலட்சுமி அடிக்கடி கலைச்செல்வன் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

மேலும் கடந்த 20 தினங்களுக்கு முன்னதாக விஜயலட்சுமி கவிதா அக்கவுண்ட் நம்பருக்கு ரூபாய் 20 ஆயிரத்தை அனுப்பி வைத்து ஜெயபாலனிடம் பணத்தை கவிதா கொடுத்துள்ளார்.

இதை அடுத்து கடந்த பிப்ரவரி 29 அன்று இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூர் வந்த ஜெயபாலன், ககாளியம்மாளின் வீடு அருகில் சென்று காளியம்மாள் வீடு எது என கேட்டு தெரிந்து கொண்டு காளியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது காளியம்மாளிடம் ஜெயபாலன் தான் கால்நடை மருத்துவர் எனக் கூறி நாய்களுக்கு ஏதும் ஊசி போட வேண்டுமா என கேட்டு வந்துள்ளார். அப்போது சரி என தெரிவித்ததை அடுத்து நாயை நன்றாக பிடித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்று ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கயிறை எடுத்துக்கொண்டு காளியம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (30), விளாத்திகுளம் ஓடை தெருவை சேர்ந்த கவிதா (44), கீழ விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயபாலன் (24), புதியம்புத்தூர் கீழத் தெருவை சேர்ந்த கலைச்செல்வன்(27), மாமுநைனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவேக் (24) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து செய்தனர்.

மேலும் விஜயலட்சுமி ,கவிதா ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை கொக்கிரகுளம் சிறையிலும், ஜெயபாலன்,விவேக், கலைச்செல்வன் ஆகிய மூவரையும் பேரூரணி சிறையிலும் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 258

    0

    0