நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள்: கோவையில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!
Author: Rajesh5 February 2022, 1:38 pm
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நேற்று மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதில் மாநகராட்சி 100 வார்டில் 1130 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 7 நகராட்சிகளில் 1097 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
33 பேரூராட்சிகளில் 2345 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்த வேட்புமனு தாக்கல் 4572 செய்துள்ளனர். மேலும் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்களின் வேட்பு மனுவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால், காவல்துறை ஆணையாளர் பிரதீப்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தேர்தலில் பாதுகாப்பு பணி மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.