கண்டெய்னர் லாரிக்குள் கார்.. கட்டு கட்டாக பணம் : சினிமா பாணியில் சேசிங் : அதிர்ச்சி பின்னணி!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2024, 1:32 pm

ஈரோடு அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் விபத்தை ஏற்படுத்தி சென்றது. இதையடுத்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் பின் தொடர்ந்து வந்த போது அதனை அறிந்து கொண்ட கும்பல் வாகனங்கள் மீது மோதி தப்பிக்க செல்ல முற்பட்டது.

சங்ககிரியில் அதிகப்படியான லாரிகள் எப்போதும் இருக்கும் அதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் பள்ளிப்பாளையத்தில் இருந்து சங்ககிரி ஊர் வழியாக செல்ல திட்டமிட்டது கொள்ளை கும்பல்.

சங்ககிரி பகுதியில் அனைத்து மாநில சேர்ந்த லாரிகள் எப்போதும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல் அவ்வாறு அந்த பகுதிக்கு சென்று வாகனத்தை நிறுத்த திட்டமிட்டது கொள்ளை கும்பல்.

கொள்ளை சம்பவம் நடந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த போலீசார் கொடுத்த தகவலில் அடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது கண்டெய்னர் லாரி.

ஒரு கட்டத்தில் நாமக்கல் சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட போலீசார் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த சாலை முழுவதும் போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் சாலையில் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்ப திட்டமிட்டுள்ளது.

ஆனால் போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டதால் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசாரை தாக்க முற்பட்ட போது துப்பாக்கியால் சுட்டதால் கொள்ளையன் உயிரிழந்தார்.

மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானாவை சேர்ந்த கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை கும்பல் கேரளா ஷொரனூர் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறி வைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட காரை கண்டெய்னர்லாரிக்குள் மறைத்து வைத்து தப்பிவந்துள்ளனர். வரும் வழியில் சோதனைச் சாவடியில் சிக்காமல் வந்துள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 641

    0

    0