நண்பர்களை காவு வாங்கிய கண்டெய்னர்.. இறப்பிலும் ஒன்றாக உயிரிழந்த சோகம்…!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2024, 2:20 pm

இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் அதில் பயணித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று எதிர் திசையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது கிருஷ்ணகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ராகுல்20 (கல்லூரி மாணவர்), வசந்த் குமார் 28 (டிரைவர்), விஜய் குமார் 25 (டிரைவர்)மூன்று பேரும் நண்பர்கள்.

இதையும் படியுங்க: வெளுத்து வாங்கப் போகும் மழை… மக்களே உஷார் : வானிலை மையம் வார்னிங்!

இன்று அதிகாலை மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் வந்த போது காவேரிப்பட்டினம் அருகே வந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ராகுல் 20, விஜய்குமார் 28 இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவேரிபட்டினம் போலீசார் பலத்த காயங்கள் அடைந்த வசந்த் குமாரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு கிருஷ்ண்கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த காவேரிப்பட்டினம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி மோதிய விபத்தில் மூன்று நண்பர்களும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 662

    0

    0