அசுத்தமான குடிநீர் விநியோகம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படும் அவலம் : மறியலில் குதித்த மக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan3 March 2024, 1:34 pm
அசுத்தமான குடிநீர் விநியோகம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படும் அவலம் : மறியலில் குதித்த மக்கள்!
கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள சித்தன்னபுரம் கிணற்றில் இருந்து அசுத்தமான தண்ணீர் விநியோகிப்பதாகவும் இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டிய பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை கோவை மாநகராட்சியிலும், கோவை தெற்கு மண்டலத்திலும் மற்றும் நூறாவது வார்டு தி.மு.க கவுன்சிலரிடமும் கோரிக்கை வைத்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்பொழுது மாசு அடைந்த குடிநீர் பாட்டில்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் இந்த குடிநீர் பயன்படுத்துவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் மருந்து சீட்டுகளை கையில் வைத்துக் கொண்டும் குழாயில் வரும் அசுத்தமான நீரை கையில் ஏந்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.