பாலியல் வழக்கில் தொடர்நது தலைமறைவு.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 2:34 pm

பாலியல் வழக்கில் தொடர்நது தலைமறைவு.. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு லுக் அவுட் நோட்டீஸ்!

கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி., ஒருவருக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அப்பெண் எஸ்.பி., புகார் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்த தீர்ப்பில், ‛‛ராஜேஷ் தாஸ் குற்றவாளி. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து” உத்தரவிட்டார்.

அவரை சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால், சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார், அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்ததாக தெரிகிறது.

தலைமறைவானதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு அவர் தப்பி செல்லாத வகையில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி