தொடரும் பெட்ரோல் – டீசல், சிலிண்டர் விலை உயர்வு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 1:25 pm

கோவை : பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் சுமார் 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் கேஸ் விலை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 1300

    0

    0