கோவையில் நீடிக்கும் வன்முறை.. சட்டசபையில் இத பேசவே விட மாட்டீங்கறாங்க : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2023, 4:14 pm
கோவையில் நீடிக்கும் வன்முறை.. சட்டசபையில் இத பேசவே விட மாட்டீங்கறாங்க : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதி செயல்.
இதில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகமை தங்களின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏவிற்கு மாற்றப்பட்டு தீவிரவாத தொடர்புகள் எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கோவை இன்னும் கூட மத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகள் செயல்பாட்டிலே இருக்கின்ற காரணத்தினால் இம்மாதிரியான செயல்பாடுகள் கோவை மக்களின் அமைதியை பாதுகாப்பை பாதிக்கும் என நம்புகிறோம்.
இந்த விசயத்தில் அரசு மிகுந்த கவனத்தோடு எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும். எப்படி நீங்கள் ஒருபுறம் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக நீங்கள் அரசியல் செய்கிறீர்களோ நாங்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்காக நாங்கள் அவர்களின் குரலை பதிவு செய்ய விரும்பி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம்.
வழக்கம் போல பேரவைத்தலைவர் அவர்கள் எங்களை பேச அனுமதிக்கவில்லை. அமைச்சர்களுக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு பதில் அளிப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.